பாடசாலை மாணவர் 6 பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தென் இலங்கையின் காலி, கோவிலகொடல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது,
குறித்த நபர் மருத்துவமனையில் தாதி தொழில் செய்துவருவதாகவும் இவர் பிரத்தியேக நடன வகுப்பொன்றை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
நடனம் பயில வரும் மாணவர்கள் 6 பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
கடுமையான முறையில் மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அதனை அவரது தொலைபேசியிலும் காணொளியாக பதிவுசெய்து வைத்துள்ளார்.
15 – 16 வயதிற்குட்பட்ட மாணவர்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வகுப்பு நிறைவடைந்த பின்னர் பெண்களை வீட்டிற்கு அனுப்பிய பின்னர் சிறுவர்களை இவர் தடுத்து வைத்துள்ளார்.
இதேவேளை, மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்காக சென்றுள்ள மாணவர் ஒருவரிடம் தனது தொலைபேசி இலக்கத்தையும் வழங்கியுள்ளார்.
குறித்த மாணவரின் சகோதரன் சந்தேக நபரின் தொலைபேசியை எடுத்து சோதனை செய்துள்ளார்.
பின்னர் குறித்த நபரின் அனைத்து உண்மைகளும் அறிந்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.