பாலியல் தொந்தரவு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இற்கு இந்திய நீதிமன்ற, அழைப்பாணை.

இந்திய பெண் பணியாளர் பாலியல் ரீதியாக தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இந்திய புதுடில்லி நீதிமன்றம் ஒன்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகளுக்கு ஆஜர் அறிவித்தலை அனுப்பியுள்ளது.

எனினும் வரும் 16ம் திகதியன்று மன்றில் ஆஜராகுமாறு பட்டியலை ஹவுஸ் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த உத்தரவை நீதிமன்ற அதிகாரிகள், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மேலாளர் கென்டன் ரத்வத்தைக்கு அனுப்பியுள்ளனர்.

13 வருடங்களாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன இந்திய கிளையில் பணியாற்றும் இந்தியபெண், பிராந்திய முகாமையாளரால் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டார் என்று முறையிடப்பட்டுள்ளது.

அத்துடன் வேலையில் இருந்து நீக்கப்பட்ட தமது முறைப்பாட்டாளருக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சம்பளத்தை வழங்கவில்லை என்றும் பெண் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.