பாலியல் தொல்லை கொடுத்ததாக எந்த ஆதாரமும் இல்லை – இ.கிரிக்கெட் வாரியம்

இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரிகள் மீது வழக்கு தொடருவதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து இது பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைப்படி, 3 அதிகாரிகள் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீராங்கனைகளுக்கு 3 அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

இருப்பினும் அவர்கள் மீது எந்தவித கிரிமினல் வழக்கும் போடப்படவில்லை. அதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை.

அவர்கள் தற்போது அந்த பதவியிலும் நீடிக்கவில்லை. அவர்களுக்கான ஒப்பந்தம் ஏப்ரல் மாதத்துடன் முடிந்து விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.