தமிழ் பெண்கள் மீது இராணுவ வீரர்களால் பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்படுவதாக நல்லிணக்க அலுவலகம் ஊடகங்களுக்கு வௌியிட்ட அறிக்கையை இராணுவம் முற்றாக மறுத்துள்ளது.
2010ஆம் ஆண்டு வடக்கில் சிவில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இராணுவத்தினர் சிவில் நடவடிக்கைகளிலிருந்து விலகிவிட்டதுடன், நல்லிணக்க அலுவலகத்தால் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் முழுமையான பொய் என, இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இராணுவ வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் செயற்பாடுகளில் குற்றவாளிகளாக காணப்பட்டால், அவ்வாறானவர்களுக்கு அதிகூடிய தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தெரிவித்துள்ளது.
பிரேமவதி மனம்பேரி கொலை, கிரிஷாந் குமாரசுவாமி, ராஜினி வேலாயுதம்பிள்ளை கொலை என்பவை அதற்கான உதாரணங்கள் என, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.