இறக்குமதி செய்யப்பட்ட பால்மா கிலோ கிராம் ஒன்றிற்கான விலையினை 80 ரூபாவினால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
உலக சந்தையில் பால்மாவுக்கான விலை அதிகரித்தமை காரணமாக பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, குறித்த கோரிக்கையினை நுகர்வோர் விவகார அதிகார சபையானது வாழ்க்கைச் செலவு குழுவுக்கு முன்வைத்திருந்த நிலையில்,
இது குறித்த தீர்மானம் நேற்று(23) நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்றதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் அத்தியட்சகர் ஜெனரல் டீ.ஜீவானந்த தெரிவித்துள்ளார்.
அதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரங்களில் வெளியிட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோகிராம் பால்மாவின் முன்னைய அதிகபட்ச விலை 810 ரூபா என்பதும் குறிப்பிடத்தக்கது.
-Rishma