இறக்குமதி செய்யப்பட்ட பால்மா கிலோ கிராம் ஒன்றிற்கான விலையினை 80 ரூபாவினால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
400 கிராம் பால்மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க அனுமதி கிடைத்துள்ளது.
உலக சந்தையில் பால்மாவுக்கான விலை அதிகரித்தமை காரணமாக பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கோரிக்கை விடுத்திருந்தது.