பா.உறுப்பினர்களான காமினி ,விஜித மற்றும் பொலிசாருக்கு ஆளுங்கட்சியினரால் தாக்குதல்.. (Photos)

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர், தமக்கு மிளகாய் தூள் கொண்டு தாக்குதல் நடத்தினரென, ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தாக்குதலில், முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். நீரில் மிளகாய் தூள் கலந்து இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.

மேலும். சபாநாயகர் வருகையின் போது அவருக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிசாருக்கும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.