பா.உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்..

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2014ம் ஆண்டு அம்பாறை பிரதேசத்தில் நீர் வழங்கல் திட்டம் மேற்கொள்ளும் பொது இடம்பெற்ற மோசடி குறித்து வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்ளவே அவர் இவ்வாறு ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆதரவளித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)