பா. உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட 05 பேர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பில் நேற்று(27) மாலை முதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய பாராளுமன்றம் உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட 05 பேர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் பலரும் காயங்களுக்கு உள்ளாகினர். போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.