பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெறும் பிரபலங்களின் பெயர் பட்டியல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த வருடம் பரபரப்புக்குள்ளாகி மக்களின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த முறையும் கமலே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் டீசரை நடிகர் கமல் கடந்த சனிக்கிழமை வெளியிட்டார்.
இதில் கலந்துகொள்ள பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த பிரபலங்கள் பட்டியலில் இனியா, ராய்லக்ஷ்மி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சொர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, ஆலியா மானசா, ரகஷிதா, கீர்த்தி சாந்தனு, பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், படவா கோபி, பவர் ஸ்டார் சீனிவாசன், ப்ரேம்ஜி, பாலசரவணன், தாடி பாலாஜி, ஜான் விஜய் ஆகியோர் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது.
இதிலிருந்து சிலர் வெளியேறலாம் என்றும் தகவல் வருகிறது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போட்டி ஏற்பட்டுள்ளது. சில இளம் நடிகர், நடிகையர் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் சிலர் யார் தங்களுடன் தங்கப்போகிறார்கள் என்ற விவரம் கேட்கிறார்களாம். இன்னும் ஓரிரு தினங்களில் இறுதி பட்டியல் வெளியாகும் என்கிறார்கள்.
