பிக் மீ (Pick Me )வாடகை வாகன நிறுவனத்துக்கு எதிராக அதன் முச்சக்கரவண்டி சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நுகேகொடையில் அமைந்துள்ள பிக் மீ (Pick Me ) நிறுவனத்தின் முன்பாக இன்று (06)காலை முதல் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிக் மீ (Pick Me ) நிறுவனமானது தற்போது வாடகை சேவையில் ஈடுபடுத்தி வரும் முச்சக்கரவண்டிகளுக்கு பதிலாக சிறிய ரக டாடா மற்றும் நெனோ வாகனங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
(rizmira)