முகம் என்ன தான் எலுமிச்சை பழம் போன்ற நிறத்தில் இருந்தாலும் கூட உதடுகள் கருப்பாக இருந்தால், பார்க்க நன்றாக இருக்காது.
எனவே இவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம் உதடுகளை கடிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கும். இதனை செய்வதால் உதடுகளில் புண்கள் ஏற்பட்டு உதடுகள் கருப்பாக மாறிவிடும்.
இதற்கு எலுமிச்சையை வைத்து சில நாட்களிலேயே உதடுகளை எப்படி சிவப்பாக மாற்றலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
எலுமிச்சை சாறு:
தினமும் இரவு நேரத்தில் நீங்கள் உறங்குவதற்கு முன்பாக, எலுமிச்சை சாறை எடுத்து உங்களது உதட்டில் நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு ஒவ்வொரு இரவு வேளைகளிலும் இந்த முறையை தொடர்ந்து, இரண்டு மாதங்கள் வரை விடாமல் செய்து வந்தால் உங்களுக்கு மிகச் சிறந்த பலன் கிடைப்பது உறுதி.
எலுமிச்சை, சர்க்கரை:
எலுமிச்சையை நான்கு அல்லது தடிமனான துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அதில் ஒரு துண்டை எடுத்து, அதன் மீது சிறிதளவு சர்க்கரை மேல் பகுதியில் துவிக்கொள்ள வேண்டும். இந்த எலுமிச்சை தூண்டை உதட்டில் வைத்து நன்றாக ஸ்கிரப் செய்ய வேண்டும்.
பீட்ரூட்:
உதடுகள் சிவப்பாக மாற பீட்ருட் மற்றும் மாதுளம் மிகவும் உதவியாக இருக்கும். பீட்ருட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் மிக விரைவிலேயே கவர்ச்சியாக மாறும்
கொத்தமல்லி இலை:
கொத்தமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும். கொழுப்புச் சத்துக் குறைய குறைய உதடுகள் சுருங்கி வயதானத் தன்மையை அடைகின்றன. அதற்கு வெளிப்புறத்திலிர ந்து ஊட்டம் தரலாம். உதடுகளுக்கு வாசிலின் தடவுவது நல்லது.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய்யில் அரை டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து பளபளப்பாக காட்சியளிக்கும்.
கருமையான உதடு சிவப்பாக:
பாலேடு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் சாறு 5 சொட்டுகள் கலந்து, தினமும் உதடுகளில் பூசி வந்தால், உதட்டின் கருமை மறையும்.
ஆரஞ்ச்:
தினசரி உதடுகளின்மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பாகும். உதட்டில் அரை ஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதட்டில் தடவவும். இப்படிச் செய்தால் உதடு சிவப்பாகும்.
இதை செய்யாதீர்:
உதடுகள் வறட்சியாக இருந்தால், நாம் அடிக்கடி உதட்டை ஈரம் செய்து கொள்வது வழக்கமாகும். ஆனால் இப்படி அடிக்கடி நாம் எச்சிலில் உதடுகளை ஈரம் செய்து கொண்டிருந்தால், எச்சிலில் உள்ள பாக்டீரியாக்கள் உதடுகளின் மீது பட்டு உதடுகளில் ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே நீங்கள் இதனை செய்யாமல் இருப்பது நல்லது.