பிச்சை எடுப்­ப­தை­விட விடு­தி­களில் நடனம் ஆடு­வது மேல்: இந்திய உயர் நீதி­மன்றம் தெரி­விப்பு

பொது இடங்­களில் பிச்சை எடுப்­ப­தை­விட மது­பான விடு­தி­களில் நடனம் ஆடு­வது எவ்­வ­ளவோ மேல் என இந்திய உயர் நீதி­மன்றம் தெரிவித்துள்ளது.

மஹ­ராஷ்­டிரா மாநி­லத்தில், மது­பான விடு­தி­களில் அழ­கிகள் நடன நிகழ்ச்சி பல ஆண்­டு­க­ளாக நடந்து வந்­தது. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு, அம்­மா­நில அரசு  சட்­டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை, சட்­ட­மன்­றத்தில் மசோ­தா­வாக  நிறை­வேற்­றி­யது.

இதன்­படி நட்­சத்­திர ஹோட்­டல்கள்,  நாடக அரங்­குகள்,  கலை­ய­ரங்கம், விளை­யாட்டு கிளப்­புகள் போன்­ற­வற்­றிலும் அழ­கிகள் நட­னத்­துக்கு தடை விதிக்­கப்­பட்­டது. இதனை எதிர்த்து இந்­திய ஹோட்­டல்கள் மற்றும் ‘ரெஸ்­டாரண்ட்’ சங்கம் உள்­ளிட்­ட­வர்கள் உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தொடர்ந்­தனர்