எனக்கு பிடித்தவருடன் நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரேயா அளித்த பேட்டியில்
“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், ‘சிவாஜி’ படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். நடிப்பை காதலிக்கிறேன். ஒவ்வொருவரும் தொழிலை நேசித்து செய்தால் எத்தனை வருடங்கள் ஆனாலும் வேலையில் சலிப்பு ஏற்படாது.
தனி ஆளாக நின்றுதான் சினிமாவில் ஜெயித்து இருக்கிறேன். திரைப்படத்துறையில் கசப்பான அனுபவங்கள் எதுவும் ஏற்படவில்லை. சினிமாவில் அறிமுகமான புதிதில் எப்படி தாக்குப்பிடிக்கப் போகிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால் என்னை சுற்றி இருந்த நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோரும் உதவி செய்ததால் கசப்பான அனுபவங்கள் எதுவும் ஏற்படவில்லை.
என்னை சந்திக்கிற பலரும் உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். வாழ்க்கையிலும் திருமணம் கண்டிப்பாக நடக்கும். எனக்கு பிடித்தவரை சந்தித்து விரைவில் திருமணம் செய்து கொள்வேன்.
எனக்கு கணவராக வருகிறவர் நல்ல நண்பராக இருக்க வேண்டும். இதற்கு மேல் எஞ்சியுள்ள வாழ்க்கையை நல்லபடியாக அவரோடு கழிக்க வேண்டும். என் அழகு ரகசியம் யோகா. தினமும் மறக்காமல் யோகா செய்கிறேன். தியானத்திலும் ஈடுபடுகிறேன்.”
இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.