மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
பிணைமுறி மோசடி – C350 – C360 வரையான பாகங்கள் சபாநாயகரிடம் கையளிப்பு…
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் C-350 முதல் C-360 வரையான பகுதிகள் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று(05) காலை குறித்த இந்த அறிக்கையை சமர்பித்துள்ளார்.