மத்திய வங்கியின் பிணைமுறி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வௌியாகும் வரையில் மத்திய வங்கியின் பிணைமுறி ஏல விற்பனை கேள்விப்பத்திர குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் அதில் இருந்து நீக்குவதற்கு மார்ச் மாதம் 20ம் திகதி நிதிக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் பீ.சமரசிறி தெரிவித்துள்ளார்.
திறைசேரி பிணைமுறி வழங்கல் சம்பந்தமாக விசாரணையினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று(29) மூன்றாவது நாளாகவும் சாட்சியமளித்த போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மத்திய வங்கியில் இடம் பெற்ற திணைக்களப் பிரதானிகளின் இடமாற்றங்களில், கடன் திணைக்களத்தின் அத்தியட்சகராக அது தொடர்பில் தொழில்நுட்ப அறிவற்ற தீபா செனவிரட்ன நியமிக்கப்பட்டமை சம்பந்தமாக, அப்போதைய மத்திய வங்கியின் ஆளுநரான அர்ஜுன் மஹேந்திரனிடம் தனது அதிருப்தியை வௌிப்படுத்தியதாகவும் அவர் மேலும் கூறினார்.