மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல் குறித்து விசாரிக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய அதில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.
குறித்த அறிக்கை நேற்று(03) ஜனாதிபதியினால் விசேட அறிவிப்பாக பொதுமக்களுக்கு அறியப்படுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியியின் பிணை முறி கொடுக்கல் வாங்கலில் அர்ஜுன் அலோசியஸ் தலைமையிலான ‘பெர்ப்பெச்சுவர் ட்ரெஷரீஸ்’ முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பேர்பச்சுவல் நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ள ஆகக் குறைந்த இலாபம் 11,145 மில்லியன் ரூபா என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இதனால் ஊழியர் சேமலாம நிதி உள்ளிட்ட இதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நட்டம் 8,529 மில்லியன் ரூபா. எவ்வாறாயினும், குறித்த கொடுக்கல் வாங்கலினால் ஏற்பட்ட நட்டம் ஆணைக்குழுவின் எண்ணிக்கையை விடவும் அதிகரிக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
(பிணை முறி தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையினை வாசிக்க இதனை கிளிக் செய்ய..) ..
#reeshma