(FASTNEWS | COLOMBO) – இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், பிணை முறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.