(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 9 பேருக்கான குற்றப்பத்திரிக்கை தயார் நிலை பணிகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த வழக்கை விசாரணை செய்வதற்காக நிலையான மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமொன்றை நியமிக்குமாறு சட்டமா அதிபர் , பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த கோரிக்கை தற்போதைய நிலையில் எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி மேலும் தெரிவித்தார்.