பிணை முறி மோசடி விசாரணைகளில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி…

இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடியை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகளில் எந்த வித தலையீடுகளையும் தம்மால் செய்ய முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அதனை எதிர்கொண்டேயாக வேண்டுமென, அதில் சமரசத்துக்கே இடமில்லையென்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று(11) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாசீம் ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)