மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையுடன் 03ம் இணைப்பு சமர்ப்பிக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
தேசிய சுவடிகள் திணைக்களத்திற்கு நேற்று முன்தினம் சென்ற தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், பிணை முறி அறிக்கையின் தகவல்களை அண்மையில் கோரியிருந்த நிலையில், பிணை முறி அறிக்கையின் மூன்றாம் இணைப்பிற்கு என்ன நடந்தது என நேற்று முன்தினம் சுவடிகள் திணைக்களத்திடம் வினவியிருந்தார்.
இதற்கு அறிக்கையொன்றின் ஊடாக பதிலளித்த ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ,
மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையுடன் முதலாம், இரண்டாம், நான்காம் மற்றும் 05ஆம் இணைப்புகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும், மூன்றாம் இணைப்பு சமர்ப்பிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமக்கு கிடைக்காத இணைப்பு ஒன்று குறித்து நாட்டுக்கு தெரிவிக்க ஏதுமில்லை என ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பிணை முறி விவகாரம் – ஆணைக்குழுவின் அறிக்கையுடன் 03ம் இணைப்பு சமர்ப்பிக்கப்படவில்லை..