மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக பிரதமர் செயலகம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கையில் அறிவித்துள்ளது.
ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் குறித்து தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு விளக்கமளிக்க, எந்த நேரத்திலும் ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(rizmira)