பிதுரங்கல விவகாரம் – கைது செய்யப்பட்ட மூவரும் விடுதலை…

வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் தம்புள்ளை நீதவான் நீதிமன்றினால் இன்று(10) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கின் சந்தேக நபர்களான மூன்று இளைஞர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதனை அடுத்து அவர்களை விடுதலை செய்யுமாறு தம்புள்ளை நீதவான் கோசல பண்டார இலங்கசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் குற்றத்தை ஒப்புக்கொண்டதனை அடுத்து முதலாவது சந்தேக நபருக்கு கடுமையாக எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேக நபர்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் அரசாங்க கட்டணமாக 1500 ரூபாவை செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 26 ஆம் திகதி மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.