பினிபினிங் பிலிப்பினாஸ் அழகுராணி போட்டி

2016 மிஸ் பிலிப்பைன்ஸ் அழ­கு­ராணி போட்டி அடுத்த வாரம் நடை­பெ­ற­வுள்­ளது. பினி­பினிங் பிலிப்­பினாஸ் (Binibining Pilipinas) என இப்­போட்டி அழைக்­கப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

57 ஆவது தட­வை­யாக நடை­பெறும் இப்­போட்­டியில் பங்­கு­பற்றும் யுவ­தி­களை ஊட­கங்­க­ளுக்கு அறி­முகம் செய்யும் நிகழ்வு மணிலா நகரில் அண்­மையில் நடை­பெற்­றது. தற்­போ­தைய மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ரா­ணி­யான பிலிப்­பைன்ஸைச் சேர்ந்த பியா அலோன்ஸோ வூர்ட்ஸ்பாச் உட்­பட முன்னாள் பினி­பினிங் பிலிப்­பினஸ் அழ­கு­ரா­ணிகள் பலரும் இந்நிகழ்வில் அதிதிகளாகப் பங்குபற்றினர்.