வரவு – செலவுத் திட்டத்தில் பியர் விலை குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் அதை உடனடியாக மீண்டும் அதிகரிக்குமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது
மதுசாரத்திற்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் குறித்த இந்த கவனயீர்ப்பு பேரணி இன்று(17) யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
ஜனாதிபதி குறித்த இந்த விடயத்தில் தலையிட்டு பியருக்கான விலையை மீண்டும் அதிகரித்து அவர் வழங்கிய போதையற்ற நாடு எனும் வாக்குறிதியை பூரணமாக அமுல்படுத்துமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
ஜனாதிபதிக்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் வடமாகாண ஆளுனர் அலுவலகத்திலும் யாழ் மாவட்ட அரச அதிபரிடமும் இவர்கள் கையளித்தனர்.
வடமாகணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் மற்றும் வடமாகாண நல்லொழுக்க சம்மேளனம் வடமராட்சி நல்லொழுக்க நிறுவனம் உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்
#–யாழ் நிருபர் சுமித்தி