ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 20 லட்சம் கப்பம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பியல் நிசாந்த என்பவரே இதுகுறித்த முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இருபது லட்சம் கப்பமாக தருமாறு தன்னிடம் கோரிய மர்ம நபர் ஒருவர், அவ்வாறு பணம் தரப்படாவிட்டால் குடும்ப உறுப்பினர்களை கடத்தப் போவதாக அச்சுறுத்தியதாகவும் பியல் நிசாந்த தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அளுத்கம பொலிசில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கிடையே குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்ற வகையில் இந்த மிரட்டல் அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கவும் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.