(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று கொழும்பு உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளர் ஒருவரை எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.