பிரசன்னவுக்கு நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவு அழைப்பானை

மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மீதொடமுல்லை காணி கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னரும் முதலமைச்சரும் அவரது மனைவியும் இரு முறைகள் இப்பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஐ.ம.சு.மு.யில் வேட்பாளராக களமிறங்கியுள்ளதால் அவரது விசாரணையை ஒத்திவைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் அக்கட்சியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தும், நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் பிரிவு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இந்த விசாரணையை உடன் நடாத்த வேண்டும் என அனுமதி பெற்றுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

(riz)