பிரசன்ன ரணவீரவை கைது செய்ய நடவடிக்கை…

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களனி பிரதேச சபைக்கு சுதந்திர கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மகிந்த அணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாராளுமன்றஉறுப்பினரை கைது செய்வதற்காக நேற்றையதினம் அவரது இல்லத்துக்கு பொலிஸ் குழு ஒன்று சென்றிருந்த வேளையில், அவர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ம் திகதி இரவு கிரிபத்கொடை – விகாரமாதேவி மகளிர் வித்தியாலயத்திற்கு அருகில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் வைத்து, ஜகத் பிரசன்ன கமகே என்ற குறித்த வேட்பாளர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனவீரவும் மேலும் சிலரும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளானவர் தற்போதும் கிரிபத்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.