ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர இன்று(06) நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
களனி பிரதேசசபை தலைவராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவே இவ்வாறு வருகை தந்துள்ளார்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொட பகுதியில் இருந்த 80 பர்ச்சஸ் நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதில் இரண்டு பர்ச்சஸ் காணியை பிரசன்ன ரணவீரவின் உறவினர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)