பிரசவ வலிக்கு XXX படம் போட்டுக்காட்டிய லண்டன் மருத்துவமனை

பிரித்தானிய நாட்டில் பிரசவ வலியுடன் வந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு மருத்துவமனை நிர்வாகம் ஆபாசப்படம் போட்டு காட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு லண்டனில் உள்ள Northwick Park என்ற மருத்துவமனைக்கு பெயர் வெளியிடப்படாத 24 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.

கணவனுடன் சென்றுருந்த அந்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் ‘நோயாளிகள் காத்திருக்கும் அறைக்கு’ செல்லுமாறு கூறியுள்ளனர்.

பிரசவ வலியுடன் இருந்த அந்த பெண்ணும் அவருடைய கணவரும் குறிப்பிட்ட அந்த அறைக்குள் நுழைந்தவுடன் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அறையில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் அறுவெறுக்கத்தக்க ஆபாசம் படம் ஒன்று ஓடிக்கொண்டு இருந்ததே இந்த அதிர்ச்சி காரணம்.

நோயாளிகள் மற்றும் குழந்தைகள் வந்து செல்லும் மருத்துவமனை அறையில் ஆபாசப்படம் காட்டப்படுவதை கண்டு ஆத்திரம் அடைந்த அந்த கர்ப்பிணி பெண் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் புகார் அளித்துள்ளனர்.

மருத்துவமனை அறையில் சுமார் 20 நிமிடங்களாக ஆபாசப்படம் காட்டப்பட்டுள்ளதை அறிந்த நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மருத்துவனையில் உள்ள டிஜிட்டல் சேனலில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் அடங்கிய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்படுவதால் இந்த தவறு நிகழ்ந்துள்ளதாக நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

எனினும், இந்த சம்பவத்தால் மன வேதனை அடைந்துள்ள தம்பதிக்கு மருத்துவமனை சார்பில் மன்னிப்பு கோருவதாக நிர்வாகிகள் தெரிவித்த பின்னர் இவ்விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.