ஐக்கிய தேசிய கட்சியை முழுமையாக மறுசீரமைப்பு செய்வது தொடர்பான யோசனைகளைப் பெற்றுக்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று(05) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தலைமையில் அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, அகிலவிராஜ் காரியவசம் மற்றும் அஜித் பீ பெரேரா ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஒருவாரத்திற்கு முன்னர் குறித்த குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது