பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளை தோற்கடிக்க வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மாமனாரான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆகியோரினால் அறிமுகம் செய்யப்பட்ட முதலாம் இரண்டாம் தலைமுறை பொருளாதார கொள்கைளினால் நாடு கடன் சுமையில் சிக்கிக் கொண்டது.
இதனால் ரணில் விக்ரமசிங்கவினால் அறிமுகம் செய்யப்பட உள்ள மூன்றாம் தலைமுறை பொருளாதாரக் கொள்கைகளை தோற்கடிக்க வேண்டும். ரணிலின் பொருளாதாரக் கொள்கைகளினால் பல முக்கிய நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
மேலும், கடந்த கால அரசாங்கங்களினால் பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளினால் நாட்டு மக்கள் கடன் சுமையில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் தனிநபர் ஒருவர் 385000 கடனாளியாகியுள்ளார் என அனுரகுமார திஸாநாயக்க செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.