இலங்கையின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை பிரதமரின் புதுடில்லிப் பயணத்துக்கான நாட்களை ஒழுங்கு செய்யும் பணியில் இந்திய, இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம், இலங்கையின் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்றதையடுத்தே, அவர் தனது முதல் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருக்கிறார்.
இலங்கை ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற மைத்திரிபால சிறிசேனவும். தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் இந்தியாவுக்கே மேற்கொண்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(riz)