பிரதமரின் வரித்திருத்தத்தால் பொருட்களின் விலைகள் உயரும் – அநுர

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரி திருத்த யோசனை மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்கக் கூடும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.