பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் தேசிய பத்திரிகை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் செயலாளராக துசார டீ வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதியுடன் இவர் இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில்முறை சமூகவியலாளரான இவர் அரசு அல்லாத பல தேசிய அமைப்புகள் பலவற்றில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்தவர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விசேடமாக வடக்கு,கிழக்கு பகுதிகளில் சுனாமியின் ஏற்பட்ட பின்னர் சேதமடைந்த பாடசாலைகளை புனரமைக்கும் செயற்திட்டத்தின் பணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியினதும், பிரதமரினதும் மிகவும் நெருக்கமான இவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்து பிரதமருக்காக வேலைகளில் ஈடுபட்டவர் என்றும், தற்போதும் இவர் பிரதமரின் சமூக ஊடகப்பிரிவின் பிரதானியாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.