பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இதனைக் கூறினார்.