பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று(04) ஆரம்பமாகவுள்ளது.
இன்று(04) காலை 9.30 க்கு ஆரம்பமாகவுள்ள விவதாம் இரவு 9.30 வரை நடைபெறவுள்ளது. மேலும், விவாதத்தினை தொடர்ந்து இரவு 9.30 க்கு வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தினேஷ் குணவர்தன அடங்கலான கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் 21 ஆம் திகதி பிரதமருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர்.
14 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 55 உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர். இதில் சுதந்திர கட்சி அமைச்சர்கள் நான்கு பேர் கையொப்பமிட்டிருந்தனர்.