பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 22ம் திகதிக்கு முன்னர் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைமையில் சபாநாயகரிடம் கையளிக்க உள்ளதாக குறித்த கட்சி தெரிவித்துள்ளது.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிணை முறி விவகாரம், கண்டி வன்முறையின் போது நிலைமையினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர தவறியமை உள்ளிட்ட 14 காரணிகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 54 பேரில் 32 பேர் கடந்த வாரம் நிறைவில் கையெழுத்திட்டுள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிறு கட்சிகளது நிலைப்பாட்டினை அறிய ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அதுகுறித்து எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து நாளை(20) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-Rishma