பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையில் தமது பிரஜா உரிமையை நீக்குவது குறித்து எந்த பரிந்துரைகளும் விடுக்கப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சூரியவெ வ பிரதேசத்தில் நேற்று(28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“.. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரச ஊடகங்கள் மூலம் பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், தாம் வேட்பாளர் என்பதனால் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவை ஏற்றுக் கொள்ள முடியாத காரணங்களாகும்.
மேலும் குறித்த எனது பிரஜா உரிமையை நீக்க பரிந்துரைக்கப்படின் பிரதமரால் முடிந்தால் தனது பிரஜா உரிமையினை நீக்குமாறு சவால் விடுக்கிறேன்
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியினருக்கு வாக்களித்தவர்கள், அரசாங்கத்தை நன்நெறிப்படுத்துவதற்கு மொட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்..” என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
#g-rishma