பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(06) சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மங்கள சமரவீர, சரத் அமுணுகம, நிமல் சிறிபாலடி சில்வா, சஜித் பிரேமதாஸ, மலிக் சமரவிக்ரம மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய அமைச்சர்களும் இந்த விஜயத்தில் பிரதமருடன் இணைந்து கொள்ளவுள்ளனர்.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் அங்கு செல்கின்றனர்.
தனது விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டின் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.