பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(14) வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்கிறார்.
இதற்கமைய, இன்று(14) முற்பகல் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவின் புதிய கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளார்.
பின்னர் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில், வீடமைப்பு, மீள்குடியேற்றம், உட்பட ஏனைய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேங்கள் குறித்து ஆராய உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அவசர விபத்துப் பிரிவை திறந்துவைக்க உள்ளதுடன், பலாலி விமான நிலைய கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடவுள்ளார்.
மேலும், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவிலும் பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் பங்கேற்க உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது