பிரதமர் கட்டளையின்படி ஐதேகட்சியின் ஆசன அமைப்பாளர்களுக்கு சிரிகொத்தவுக்கு அழைப்பு..

நாடளாவிய ரீதியில் உள்ள, ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து ஆசன அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை எதிர்வரும் ஜனவரி 03ம் திகதி கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவுக்கு அழைக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் அமோக வெற்றி குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதோடு, குறித்த கலந்துரையாடலில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக கட்சியின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

#reeshmaa..