பிரதமர் செயலாளராக சமன் ஏக்கநாயக நியமிப்பு

புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தினை இன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று(24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

இதற்கு முன்னரும் பிரதமரின் செயலாளராக சேவை புரிந்த சமன் ஏக்கநாயக்க அவர்கள் இலங்கையின் பொதுநிர்வாக சேவையிலுள்ள அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)