அரசாங்கத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(28) விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் குறித்த இந்த விசேட கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க் கட்சியினால் அரசாங்கத்துக்கு விடுக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளிப்பது இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.