(FASTNEWS|COLOMBO) – வரலாற்றில் முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வென்றுள்ள இங்கிலாந்த்து கிரிக்கெட் அணி வீரர்கள், பிரித்தானிய பிரதமர் தெரசாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக் கிண்ண தொடரின் இறுதி போட்டியானது லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியும் சுப்பர் ஓவரும் சமநிலையடைந்த நிலையில் பவுன்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இங்கிலாந்து வீரர்களை அந்நாட்டு பிரதமர் தெரேசா மே சந்தித்துள்ளார்.
இங்கிலாந்து வீரர்கள் வரலாற்றை புதுப்பித்துள்ளதாக இதன்போது தெரேசா மே தெரிவித்துள்ளார்.



