பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது பதவியில் இருந்து விலகுமாறு இன்றோ அல்லது நாளையோ கோரிக்கை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று(27) சுகாதார அமைச்சில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள் சில கூடி கலந்திரையாடிய போதே குறித்த கோரிக்கை குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் நெருக்கடி மிக்க அரசியல் நிலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை நாளை(29) மாலை தீர்மானமிக்க பேச்சுவார்த்தை ஒன்றிற்காக அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.