பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாளை(15) தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மஹிந்த ரஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றிவிட்டு நாளை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
