பிரதமர் மற்றும் ஜனாதிபதியினால் மூன்றாவது முறையாகவும் வழக்கு ஒத்திவைப்பு..

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மூன்றாவது முறையாகவும் எதிர்வரும் பெப்ரவரி 26ம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(04) தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதம் இடம்பெறுவதால், வழக்கின் சாட்சியாளர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க முடியவில்லை என அவர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக, போலி ஆவணங்களை வௌியிட்டமையால், இனங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையில் செயற்பட்டதாக, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில், மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும், இம் மாதம் 10ம் திகதி முதல் 30ம் திகதி வரை அவுஸ்திரேலியா செல்ல திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அனுமதியளித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

#reeshma