பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு..

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்றைய(14) தினமே குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான விவாதம் மேற்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற வேண்டும் என்றும் சபாநாயகரிடம் குறித்த கட்சியானது கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.